shadow

ஷில்பா ஷெட்டி தங்கைக்கு நடுரோட்டில் மிரட்டல்

விஜயகாந்த் நடித்த ‘ ராஜ்யம் ‘ மற்றும் மாதவன் நடித்த ‘ நான் அவள் அது ‘ போன்ற படங்களில் நடித்தவர் ஷமிதா ஷெட்டி . ஷில்பா ஷெட்டியின் தங்கையான ஷமிதா ஷெட்டி நடித்த மோஹப்பாட்டின் படம் மிகச்சிறந்த வெற்றிபெற்றதோடு பல விருதுகளையும் அள்ளி குவித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஷமிதா ஷெட்டி மும்பை தானே அருகே காரில் தனியாக சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர் அவரது காரை இடித்து சென்றுள்ளார் . மேலும் காரின் ஓட்டுனரை தாக்கியதோடு மட்டுமல்லாமல் ஷமிதா ஷெட்டியையும் அவதூறாக பேசியுள்ளதாக தானே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

ஷமிதா ஷெட்டி கூச்சலிட்டதும் மக்கள் வந்ததால் அவர்கள் மூவரும் தப்பி ஓடிவிட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரை அடுத்து போலீசார் அந்த மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

Leave a Reply