வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்பி சென்ற படகு கவிழ்ந்ததால் பரபரப்பு

பாட்னாவில் உள்ல பாடாலிபுத்ரா என்ற தொகுதியின் எம்.பியாக இருந்து வரும் ராம் கிரிபால் யாதவ் என்பவர் தனது தொகுதியில் உள்ள வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்துவிட்டு படகில் திரும்பி கொண்டிருந்தபோது திடீரென அவர் சென்ற படகு கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

பாஜக எம்பி சென்ற படகு கவிழ்ந்ததால் உடனே அந்த பகுதியில் இருந்த உள்ளூர் மக்கள் சிலர் தண்ணீரில் குதித்து எம்பி ராம் கிரிபால் யாதவ் அவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தை சுற்றி இருந்த மக்கள் தங்களது மொபைல்களில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றது

 

Leave a Reply