வெள்ள நிவாரணத்திற்காக கர்நாடகத்தில் கட்டப்பட்ட சுவர்

கர்நாடகாவில் சமீபத்தில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கர்நாடகாவில் உள்ள 22 மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஷிவமோகா என்ற பகுதியை சார்ந்த ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஒரு சுவரை கட்டி அதில் சின்னச்சின்ன பகுதிகளாக பிரித்து மக்களுக்கு தேவையான பொருட்களை அடுக்கி வைத்துள்ளார்.

உடைகள், காலணிகள், போர்வைகள், உணவுகள், குடிதண்ணீர், மருந்து பொருட்கள் என அனைத்து பொருட்களும் அந்த சுவரில் உள்ள பாகங்களில் உள்ளது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்து செல்லலாம்.அதேபோல் உதவி செய்ய விரும்புபவர்களும் அதில் சுவரில் தங்களால் இயன்ற பொருட்களை வைத்துவிட்டும் செல்லலாம். இது மக்களின் சுவர் என்று அழைக்கப்படுகிறது

Leave a Reply