shadow

வெற்றிப்பட இயக்குனருக்கு புல்லட் பைக் வாங்கி கொடுத்த விஜய்சேதுபதி

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று ’96. இந்த படத்தில் உள்ள ராம், ஜானு கேரக்டர்களில் நடித்ததால் விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவருமே புகழின் உச்சிக்கு சென்றனர்.

இந்த நிலையில் ’96’ திரைப்படத்தை வெற்றிப்படமாக்கிய இயக்குனர் பிரேம்குமாருக்கு நடிகர் விஜய்சேதுபதி புல்லட் பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்த புல்லட்டின் விலை ரூ.3 லட்சம் இந்த புல்லட்டுக்கு 0096 என்ற பதிவெண்ணையும் விஜய்சேதுபதி வாங்கி கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இயக்குனர் பிரேம்குமார் தற்போது ’96’ திரைப்படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். ராம், ஜானு கேரக்டரில் சர்வானந்த் மற்றும் சமந்தா நடித்து வரும் இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் தோன்றவுள்ளதாக கூறப்படுகிறது

 

Leave a Reply