வெற்றிகரமாக பிரிந்தது சந்திராயன் விண்கலம் சந்திராயன்-2 விண்கலம்

கடந்த ஜூலை மாதம் இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிந்துள்ளது. சந்திரனில் இருந்து குறைந்தபட்சமாக 119 கிமீ மற்றும் அதிகபட்சமாக 127 கிமீ தொலைவில் அமைந்துள்ள சுற்றுப்பாதையில் சந்திராயன் 2 தற்போது சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சந்திராயன்-2 விண்கலத்திலிருந்து, லேண்டர் விக்ரம் இன்று மதியம் 1.10 மணிக்கு திட்டமிட்டபடி பிரிந்ததாகவும், இதன் மூலம் சந்திராயன்-2 தனது பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்ல்லை எட்டியுள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதத்துடன் கூறியுள்ளனர்.

இனி லேண்டர் விக்ரம் படிப்படியாக நிலவை நோக்கி செல்லும் என்றும், செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1.30 மணியிலிருந்து 2 மணிக்குள் திட்டமிட்டபடி சந்திரனில் தரையிறங்கும் என்றும், லேண்டர் சந்திரனில் தரையிறங்கிய பின்னர், அதிலிருந்து பிரக்யான் ஆய்வூர்தி வெளியேறி நிலவின் தரையில் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

Leave a Reply