shadow

விஸ்வாசம் கட் அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்

viswasam-motionposterதல அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நேற்றிரவு முதலே அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிய தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் திருக்கோவிலூரில் உள்ள திரையரங்குக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஜித்தின் கட்அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்அவுட் சரிந்து கீழே விழுந்தது.

இந்த விபத்தில் அஜித்தின் ரசிகர்கள் ஏழுமலை, ஸ்ரீதர், முத்தரசன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் காயம் அடைந்த 6 பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் திரையரங்கு வளாகம் சிறிது நேரம் பதற்றத்துடன் காணப்பட்டது.

Leave a Reply