shadow

விஷால், ஆர்யாவுக்கு ஒரே மேடையில் திருமணமா?

ஐதராபாத் தொழிலதிபர் மகள் அனிஷாவை நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ள இருக்கும் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவை திருமணம் செய்யவிருப்பதாகவும், இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இருவரும் ஒரே மேடையில் திருமணம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்ததில் இருந்து ஆர்யா-சாயிஷா காதலித்து வருவதாக கூறப்படுகிறது. எனவே விஷால்-அனிஷா, ஆர்யா-சாயிஷா திருமணங்கள் வரும் மார்ச் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

நடிகர் சங்க கட்டிடம் முடிந்தபின்னர் திருமணம் என்ற உறுதியில் இருந்த விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply