shadow

விஷாலை முந்தினார் ஜோதிகா?

விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. மிஷ்கினின் அதே ஸ்டைல் இந்த படத்திலும் இருப்பதாகவும், ஒரு நல்ல த்ரில் படம் பார்த்த திருப்தி இருப்பதாகவும் முதல் காட்சி பார்த்தவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ஜோதிகா நடித்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்ற பின்னர் அனைத்து பத்திரிகையாளர்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் இரண்டு படங்களுக்குமே பாசிட்டிவ் ரிசல்ட் கிடைத்துள்ள போதிலும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களுக்கு ‘துப்பறிவாளன்’ படத்தைவிட ‘மகளிர் மட்டும்’ படத்திற்கு அதிக முன்பதிவுகள் ஆகியிருப்பதாக விநியோகிஸ்தர்கள் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply