shadow

விவசாய கடன் தள்ளுபடி இல்லை: தோல்வி அடைந்தும் திருந்தாத மத்திய அரசு

ஐந்து மாநில தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு விவசாய கடனை தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ருபாலா இன்று தெரிவித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இன்றைய மக்களவையில் விவசாயிகள் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக சிவசேனா கட்சியின் உறுப்பினர் காவாலி படில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ருபாலா, “மத்திய அரசு தற்போது வரை விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக எந்த திட்டமிடவும் இல்லை. இத்தகைய கடன் தள்ளுபடி சலுகையில் ஒரு மாநிலத்தின் கலாச்சரத்தை பாதிக்கலாம். கடனை திருப்பிச் செலுத்தும் மனநிலையில் இருப்பவர்கள் கூட இதனால் மனமாற்றம் அடையக்கூடும்” என்று தெரிவித்தார்.

சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரங்களில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரிதும் இந்த பிரச்சார வார்த்தைகள் உதவியதாக கூறப்படும் நிலையில் மத்திய அமைச்சர இவ்வாறு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply