ராஜஸ்தானில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான கடைக்கு மின் கட்டணமாக 3.71 கோடி ரூபாய் செலுத்தும்படி ‘பில்’ அனுப்பி வைக்கப்பட்டதால் அந்த விவசாயி அதிர்ச்சியில் மயக்கமானார்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டம் கிங்லா கிராமத்தை சேர்ந்தவர் பெமரம் படேல். விவசாயம் செய்து வரும் இவர் தனக்கு சொந்தமான கடையை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த கடையில் வாடகைக்கு இருக்கும் ஒருவருக்கு சராசரியாக ரூ.5000 மின் கட்டணம் இரு மாதங்களுக்கு ஒருமுறை வரும்

ஆனால் இந்த மாதம் அவருக்கு மூன்று கோடியே 85 லட்சத்து 14 ஆயிரத்து 098 ‘யூனிட்’ மின்சாரம் பயன்படுத்தியதாக கூறி 3.71 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தும்படி மின்சார அலுவலகம் சார்பில் பில் அனுப்பப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெமரம் படேல் அந்த ரசீதுடன் மின்சார அலுவலகம் சென்றபோது கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தவறு என்பது தெரிய வந்தது. இதன்பின் அவரை 6414 ரூபாய் செலுத்தும்படி மின்வாரிய அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply