விவசாயம் பார்த்து வருகிறேன், அதனால் நான் ஒரு விவசாயி என்று தான் சொல்ல முடியும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், நோய் பரவலை தடுக்க அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய உள்ளதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் நீர்நிலைகளை புதுப்பிக்கும் திட்டம் மூலம் ரூ.12 கோடியில் சீரமைப்பு பணி நடைபெறுகிறது என்றும், ரூ1.4.20 கோடியில் பரமக்குடி மருத்துவமனையில் விபத்து சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றும், ரூ.14 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும் காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தின் கீழ் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயனடையும் என்றும் ராமநாதபுரத்தை பசுமையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply