shadow

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள்: ஒப்பந்தம் கையெழுத்து

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது

திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த இன்று காலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். சில நிமிடங்களில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, விசிக கட்சிக்கு 2 இரண்டு தொகுதிகள் ஒதுக்கிய திமுக, ஒப்பந்தத்தில் கையெழுத்தும் இட்டுள்ளது எனவே கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த இழுபறி பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், ஐஜேகே கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply