shadow

விஜய் படங்கள் பெற்ற வரிசையான சாதனையை தவறவிட்ட ‘மெர்சல்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி தினமான அக்டோபர் 18ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்த படம் நேற்று சென்சார் ஆகி ‘யூஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘வேட்டைக்காரன்’ படத்தை அடுத்து விஜய்யின் அனைத்து படங்களும் அதாவது சுறா, காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி மற்றும் பைரவா ஆகிய 11 படங்களும் ‘யூ’ சான்றிதழ் பெற்றிருந்த நிலையில் ‘மெர்சல்’ திரைப்படம் ‘யூஏ’ சான்றிதழை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதற்கு முன்னர்’ யூ’ சான்றிதழ் பெற்றால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால் படக்குழுவினர் ‘யூ’ சான்றிதழுக்கு மெனக்கிடுவார்கள். ஆனால் தற்போது எந்த சான்றிதழ் கிடைத்தாலும் எவ்வித மறுப்பும் இன்றி படக்குழுவினர் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply