முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பது குறித்த சர்ச்சையில் சிக்கிய விஜய் சேதுபதியை கடந்த சில நாட்களாக திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்

அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் விஜய் சேதுபதி குறித்து ஒரு பதிவு செய்து அதன் பின்னர் அந்த பதிவை டெலிட் செய்துவிட்டார்

அந்த பதிவில் விஜய் சேதுபதி தமிழ் இனத்தின் கோரிக்கையை புறந்தள்ளினார், முத்தையா முரளிதரன் விஜய்சேதுபதியை புறந்தள்ளினார், அவர் அந்த படத்தில் நடிப்பதில் இருந்து வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார்

அவர் மகிழ்ச்சியாக இல்லை விரக்தியாய் நன்றி வணக்கம் என்கிறார். இது அவருக்கு நேர்ந்த அவமானம் என்று திருமாவளவன் குறிப்பிட்டு இருந்தார்

ஆனால் சிறிது நேரத்தில் திருமாவளவன் இந்த பேஸ்புக் பதிவை டெலிட் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply