விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது
இந்த நிலையில் இந்த படம் ஒரு கால்பந்து போட்டி சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்பதால் உண்மையான கால்பந்து வீரர் ஒருவர் படத்தில் தற்போது இணைந்துள்ளார்.
இந்திய கால்பந்து அணியில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை கேப்டனாக இருந்த ஐஎம் விஜயன் என்பவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவர் 15 நிமிட காட்சிகளில் மட்டுமே வந்தாலும் இவருடைய கேரக்டர் முக்கியமானது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.