shadow

விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இரு நடிகைகள் போட்டி

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 62’ படத்தில் நாயகியாக நடிக்க இரண்டு நடிகைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இருவரில் ஒருவர்தான் நாயகி என்றும் கூறப்படுகிறது

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘அகிரா’ நாயகி சோனாக்சி சின்ஹா மற்றும் ‘ஸ்பைடர்’ நாயகி ராகுல் ப்ரித்திசிங் ஆகிய இருவரில் ஒருவர் விஜய் 62′ படத்தின் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறப்பட்டபோதிலும், சம்பளம், மொத்தமான கால்ஷீட் ஆகியவை பரிசீலிக்கப்பட்டு இருவரில் ஒருவரை தேர்வு செய்ய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சோனாக்சி, ராகுல் இருவருமே ஏ.ஆர்.முருகதாஸின் முந்தைய பட நாயகிகள் என்றாலும் இருவர் நடித்த படங்களும் தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply