விஜய்சேதுபதியின் அடுத்த பட சர்ப்ரைஸ் தகவல் இதோ!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து கொண்டிருப்பது தெரிந்ததே. அந்த வகையில் அவர் நடித்து கொண்டிருக்கும் ஒரு படத்தை ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தை விஜயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் ‘சங்கத்தமிழன்’ என்று கூறப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை படக்குழுவினர் வெளியிடவுள்ளனர். இம்மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நாயகிகள் நடிக்கும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply