shadow

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் டைட்டில் ?

கடந்த 3 ஆண்டுகளாக மற்ற நடிகர்களின் படங்களை விட விஜய்சேதுபதியின் படங்கள் அதிக அளவில் தொடர்ந்த ரிலீஸ் கொண்டுவருகிறது. சென்ற ஆண்டு மட்டுமே மொத்தம் ஏழு படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. மேலும் இந்த வருடம் ரஜினியுட அவர் நடித்த பேட்ட படம் ரிலீசாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் தற்போது ஆறு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மற்றொரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இந்த படத்திற்கு ‘ துக்ளக் ‘ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் 96 படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டூடியோவே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு மேலும் இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சிந்துபாத், மாமனிதன், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல் , சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது இந்த படத்திலும் கமிட் ஆகி உள்ளார். மேலும் இந்த படத்தை பற்றிய பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply