shadow

விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது?

கடந்த ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் , செக்க சிவந்த வானம் , 96 , சீதக்காதி போன்ற விஜய்சேதுபதியின் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் ரிலீஸ் ஆன சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்திலும் அவர் நடித்துள்ளார்.

தமிழ் திரையிலகில் முன்னணி நடிகராக திகழும் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு டுவிட்டர் பக்கத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை அருண்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும், ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை குறித்த பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply