shadow

விஜயகாந்த்-மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு! கூட்டணியில் திடீர் திருப்பம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயகாந்தை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலின் விசாரித்ததாக தெரிகிறது

விஜயகாந்தை சந்தித்தது குறித்து மு.க.,ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘அரசியல் பேசுவதற்காக வரவில்லை. உடல்நலம் குறித்து மனிதாபிமானத்துடன் விசாரிக்க வந்தேன். நீங்கள் எதிர்பார்த்த சந்திப்பு இல்லை. உங்கள் நல்ல எண்ணத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும்”, என்று கூறினார்.

கூட்டணி குறித்த தீவிர ஆலோசனையில் தேமுதிக தலைவர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில் திருநாவுக்கரசர், ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து விஜயகாந்தை சந்தித்திருப்பது தமிழக அரசியல் கூட்டணியில் திடீர் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply