விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் திடீர் மாற்றம்

விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘விக்ரம் வேதா’. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவிருப்பதாகவும், புஷ்கர் காயத்ரி இயக்கும் இந்த படத்தில் அமீர்கான், விஜய்சேதுபதி கேரக்டரிலும், சயிப் அலிகான், மாதவன் கேரக்டரிலும் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதனையடுத்து இந்தி ரீமேக் படத்திற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணியும் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் ‘விக்ரம் வேதா’ இந்தி ஸ்கிரிப்டை படித்து பார்த்த அமீர்கான், அதில் பல திருத்தங்கள் கூறியதாகவும், அந்த திருத்தங்கள் செய்யும் பணியில் புஷ்கர் காயத்ரி, இந்தி ஸ்கிரிப்ட் குழுவினர்களுடன் தற்போது ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

இருப்பினும் இன்னும் ஒருசில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்காகவே புஷ்கர் காயத்ரி, பல தமிழ்ப்பட வாய்ப்புகளை தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply