விக்ரம் மகன் வேடத்தில் நடிக்கும் இளம் நடிகர்!

சியான் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விக்ரம் மகனாக நடிக்க இளம் நடிகர் ஒருவரும் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான சார்ஜானோ கலித் என்ற நடிகர் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுடன் நடிக்க இருக்கிறார். இவர் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ’ஜுன்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

பிப்ரவரி முதல் வாரம் ‘கோப்ரா’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் விக்ரமுடன் சார்ஜா கலித் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அதுமட்டுமன்றி பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் இர்பான் பதான் அவர்களும் நடிக்கும் இந்த படத்தை 7ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply