விக்ரம்-அஜய் ஞானமுத்து படத்தின் டைட்டில் அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் ’விக்ரம் 58’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த படத்தை முடித்துவிட்டு விக்ரம் பொன்னியின் செல்வன் படத்திற்கு செல்ல இருப்பதால் அவரது காட்சிகள் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. விக்ரமின் 58-வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் இந்தப் படத்தின் டைட்டிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்துடன் முடிவடைந்த விடும் என்றும் மே மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் படுகிறது

Leave a Reply