விக்ரம்-அஜய்ஞானமுத்து இணையும் புதிய படம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் சீயான் விக்ரம் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோ ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply