shadow

விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு செக் வைக்கும் சூர்யா படம்

விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை வரும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதால் டிசம்பர் 25க்கும், ஜனவரி 14க்கும் இடையே 20 நாள் வித்தியாசம் இருக்கின்றது என்பது ‘ஸ்கெட்ச்’ படக்குழுவின் திட்டம்

இந்த நிலையில் சூர்யாவின் படத்தை ஜனவரி 10ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடுகின்றார்களாம். ஏனெனில் ரஜினியின் ‘2.0’ ஜனவரி 25ல் வெளியாவதால் பொங்கலுக்கு 5 நாட்களுக்கு முன் வெளியிடுவதே படக்குழுவின் திட்டம். சூர்யா படத்தின் இந்த திட்டத்தால் ‘ஸ்கெட்ச்;’ படத்திற்கு 4 நாட்கள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply