shadow

சூப்பரான வாழைப்பூ வெங்காய அடை

தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி – ஒரு கப்,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப்,
இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்யவும்),
பூண்டு – 4 பல்,
காய்ந்த மிளகாய் – 6,
பெருஞ்சீரகம் – ஒரு டீஸ்பூன்,
சிறிய வாழைப்பூ – ஒன்று.
வெங்காயம் – ஒன்று,
துருவிய சீஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

வாழைப்பூவின் நாரை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை தனியாகவும், பருப்புகளை ஒன்று சேர்த்தும் 2 மணி நேரம் ஊறவிடவும்.

முதலில் அரிசியை மிக்ஸியில் போட்டு பாதி அரைப்பட்ட பிறகு பருப்புகள், இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கி, பிறகு வாழைப்பூ சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

வதக்கிய வாழைப்பூவை மாவில் கொட்டி நன்கு கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி, மேலே சிறிது சீஸ் சேர்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

சூப்பரான வாழைப்பூ வெங்காய அடை ரெடி.

Leave a Reply