shadow

வாட்ஸ் அப் துணை நிறுவனர் ப்ரியன் ஆக்டன் வெளியேறினார்: புதிய நிறுவனம் தொடங்குகிறார்

பிரபல குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப்பில் இருந்து அதன் துணை நிறுவனர் ப்ரியன் ஆக்டன் வெளியேறியுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அன்று அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், புதிய நிறுவனத்தைத் தொடங்க உள்ளதால் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப் தொடங்கிய காலத்தில் இருந்து ஆக்டன் அந்நிறுவனத்தில் தன்னுடைய 8 வருடங்களைச் செலவழித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் 19 மில்லியன் டாலர்களுக்கு வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது.

ஸ்டான்ஃபோர்டு மாணவரான ஆக்டன், உக்ரைனில் குடியேறியவரான ஜேன் கோம் உடன் இணைந்து 2009-ல் வாட்ஸ் அப்பை உருவாக்கினார்.

அதற்கு முன்னதாக ஆக்டனும் ஜேனும் யாஹூவில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply