shadow

வாட்ஸ் அப்-இல் யாருடன் எவ்வளவு நேரம் சேட் செய்தீர்கள் என்பது தெரியவேண்டுமா?

வாட்ஸ் அப்பில் எந்த நண்பருடன் நாம் மேற்கொண்ட உரையாடலுக்கு எவ்வளவு மெமரி தீர்ந்திருக்கிறது என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.

ஐபோனில் மட்டுமே இருந்த இந்தப் புதிய வசதி தற்போது ஆண்டிராய்டிலும் அறிமுகமாகி உள்ளது.

எப்படிக் கண்டறிவது?

வாட்ஸ் அப்பில் ‘செட்டிங்ஸ்’ பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே புதிதாக இருக்கும் ‘டேட்டா மற்றும் ஸ்டோரேஜ் யூசேஜ்’ பக்கத்தை க்ளிக் செய்யுங்கள் அங்கே எந்த எண்ணின் சாட்டுக்கு எவ்வளவு மெமரி தீர்ந்திருக்கிறது என்பதன் பட்டியலைக் காண முடியும்.

குறிப்பிட்ட சாட்டைக் க்ளிக் செய்து நாம் அனுப்பிய அல்லது நமக்கு வந்த குறுஞ்செய்திகள், தொடர்பு எண்கள், லொகேஷன், புகைப்படங்கள், ஆடியோ, வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றின் முழுத் தகவலைப் பெற முடியும்.

இந்த புதிய வசதியில் உள்ள ‘மேனேஜ் மெசேஜஸ்’ தேர்வு மூலம் அத்தகைய குறுஞ்செய்திகளை தேர்ந்தெடுக்கவோ, அழிக்கவோ முடியும்.

இந்த வசதி தற்போதைய v2.17.340 பதிப்பில் கிடைக்கிறது.

Leave a Reply