shadow

வல்லூர் மின் உற்பத்திக்கான தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட்

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் செயல்பட்டு வந்த அனல் மின் நிலையம் எண்ணூரில் உள்ள சதுப்பு இலப் பகுதிகளில் நிலக்கரி சாம்பலைக் கொட்டி மாசு ஏற்படுத்துவதாகத் தொடரப்பட்ட வழக்கில், அனல்மின்நிலையத்தை மூட சென்னை ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை முடிவடைந்து சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதன்படி வல்லூர் அனல் மின்நிலைய சாம்பலை கொட்ட சென்னை ஐகோர்ட் விதித்த தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து வல்லூரில் மின் உற்பத்தி தொடங்குவதற்கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. மேலும் ஐகோர்ட் தடையால் கடந்த 5 நாளாக வல்லூரில் 1500 மெ.வா. மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply