வட இந்திய ரயில்வேவாக மாறி வரும் தெற்கு ரயில்வே! மதுரை எம்பி ஆவேசம்

மதுரை கோட்ட ரயில்வேயில் காலியாக இருந்த 952 பணியிடங்களில் வெறும் 10 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். மீதி அனைவரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இதே மாதிரி போய்க்கொண்டிருந்தால் தெற்கு ரயில்வே வட இந்திய ரயில்வேவாக மாறிவிடும் என்று ஆவேசமாக மதுரை மக்களவை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு ரயில்வே துறை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் தெற்கு ரயில்வே வட இந்திய ரயில்வேவாக மாறிவிடும் ஆபத்து இருப்பதாகவும் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

மேலும் பெருகிவரும் வேலை வாய்ப்புக்கு ஏற்ப தமிழர்கள் அதிக அளவில் ரயில்வே துறை தேர்வு எழுதி, அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிறமொழி பேசுபவர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தால் பயணிகளுக்கும் அதிகாரிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply