shadow

வடகொரியா-அமெரிக்கா போல் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஷாபாஸ் ஷரிப்

வடகொரியாவும், அமெரிக்காவும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது போல் இந்தியாவும் பாகிஸ்தானும் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் சகோதரரும், பிரதமர் பதவிக்கான வேட்பாளருமான ஷாபாஸ் ஷரிப் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கொரியா போரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே அமெரிக்காவும் வடகொரியாவும் பரம எதிரிகளாக இருந்து வந்தன. அணு ஆயுத வலிமையை காட்டி ஒருநாட்டை மற்றொரு நாடு அச்சுறுத்தி வந்தன. அணு ஆயுதம் என்ற கொள்கையை கைவிட்டு வடகொரியாவும் அமெரிக்காவும் அமர்ந்துப் பேசி சமாதானம் செய்துகொள்ள முடியுமானால், காஷ்மீர் விவகாரத்தை மையமாக வைத்து முதலில் பேச்சுவார்த்தையை தொடங்கி, அதே பாதையை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் கையாள கூடாது?’ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நமது பிராந்தியத்தில் இருதரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் கனிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதை சர்வதேச சமுதாயம் உறுதிப்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்துக்கு உடன்பட்டு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள காஷ்மீர் விவகாரத்துக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஷாபாஸ் ஷரிப் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply