shadow

வடகொரியா அணு ஆயுத சோதனை: இயற்கை கொடுத்த தண்டனை

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவ்வப்போது அணு ஆயுத சோதனை நடத்தி வரும் வடகொரியா நாட்டின் மீது அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் வடகொரியா மீது இயற்கையே கடும் நடவடிக்கை எடுத்துவிட்டது

ஆம், வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுதச் சோதனையால் மலைப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன. நில அதிர்வு, ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது போன்று தொடர்ந்து மீண்டும் மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டால், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, மலை பாறைகள் சரியும் அபாயம் ஏற்படும் என்றும் இதனால் வடகொரியாவுக்கு மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கும் சிக்கல் ஏற்படும் என்றும் சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Leave a Reply