வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு: புயல் உருவாகுமா?

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் தமிழகம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாகவும் இதன் காரணமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply