shadow

“லோக் ஆயுக்தா விசாரணையில் முதல்வர் வருவாரா?” ஸ்டாலின் கேள்வி

லோக் ஆயுக்தா மசோதாவில் மற்ற மாநிலங்களைப் போல் முதல்வரை விசாரிக்க வேண்டும் என்பது தெளிவாக இல்லை என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய ஸ்டாலின், “லோக் ஆயுக்தா மசோதா கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்பு சுதந்திரமாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். லோக் ஆயுக்தா அமைப்பு தலைவரை தேர்வு செய்யும் குழுவில் உயர்நீதிமன்ற நீதிபதியை சேர்க்க வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் லோக் ஆயுக்தா வரம்புக்குள் வருவர். எவராயினும் சட்டத்திற்கு முன் சமம்; ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால் விசாரிக்கப்படுவர்” என்று ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்தார்.

இதனையடுத்து ,லோக் ஆயுக்தா மசோதா விவாதத்தின் போது சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா இருக்கிறது. அரசு ஒப்பந்தங்கள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவை பற்றி லோக் ஆயுக்தா விசாரிக்க முடியாது” என்று கூறினார்.

Leave a Reply