லோக்பால் அமைப்பின் முதல் தலைவர் பதவியேற்றார்.

இந்தியாவின் முதல் லோக்பால் தலைவர் சந்திரகோஷ் சற்றுமுன் பதவியேற்று கொண்டார்.

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் கடந்த சில நாட்களுக்கு முன் நியமனம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் தன்னுடைய பதவியை ஏற்றுக் கொண்டார். பதவியேற்புக்கு பின் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத், துணை ஜனாதிபதி வெங்கையாவை ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இன்று பதவியேற்றுள்ள லோக்பால் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை என்பதாகும். லோக்பால் தலைவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply