லிபியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

லிபியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வலியுறுத்தி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் அங்கு நாளுக்கு, நாள் நிலைமை மோசமாகி வருகிறது. ஏற்கனவே இந்தியர்கள் பலரை அங்கிருந்து நாட்டிற்கு அழைத்து வந்த நிலையில் திரிபோலி நகரில் இன்னமும் 500 பேர் உள்ளனர்.

திரிபோலி நகரில் நிலவரம் மோசமாகி வருவதால் விமானங்கள் இயங்கும் இந்த சூழலை இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியர்கள் அனைவரும் உடனடியாக லிபியாவில் இருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Leave a Reply