ரூ.10 கோடி சம்பளம், சிங்கிள் பேமெண்ட்: நயன் கண்டிஷனுக்கு ஓகே சொன்ன அண்ணாச்சி
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா, தமன்னா, ஹன்சிகா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்
இதில் நயன்தாரா சிங்கிள் பேமெண்ட்டாக ரூ.10 கோடி கேட்டதாகவும், அதற்கு அண்ணாச்சி தரப்பு ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகிறது
ஆனால் இவை அனைத்துமே வதந்தி என்றும், அண்ணாச்சி படம் நடிக்கும் எண்ணத்தில் இல்லை என்றும் ஒருதரப்பினர் தெரிவித்து வருகின்றனர். எது உண்மை? எது வதந்தி என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்
Leave a Reply
You must be logged in to post a comment.