ராஜராஜ சோழன் தமிழ்ப்பற்று இல்லாதவரா? பொய்யர்களுக்கு ஒரு விளக்கம்!

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டி காலத்தால் அழியாத புகழை பெற்ற ராஜராஜ சோழன் மீது சிலர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் குற்றஞ்சுமத்தி வருகின்றனர். தமிழை விட இராஜராஜன் சமஸ்கிருதத்திற்குதான் முக்கியத்துவம் கொடுத்ததாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

உண்மையில் தேவாரம், திருவாசம் உள்ளிட்ட திருமுறைகளின் மூலச் சுவடிகள் சிதம்பரத்தில் தீட்சதர்களின் வீடுகளில் இருப்பதை அறிந்து, அவற்றை அங்கிருந்து மீட்டவர் தான் இராஜராஜ சோழன். திருமுறைகளை மீட்டு கொண்டுவந்து அந்த பதிகங்களை பாடி வழிபட சைவ சமய ஓதுவார்கள் 50 பேர் கொண்ட இசை குழுவை நியமித்ததால் அவருக்கு “திருமுறை கண்ட சோழன்” என்ற பட்டமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இராஜராஜனுக்கு திருமுறை கண்ட சோழன் என்றுதான் பட்டம் வழங்கப்பட்டுள்ளதே தவிர, சமஸ்கிருதத்தை தூக்கிய சோழன் என்றோ அல்லது வேதங்கள் போற்றிய சோழன் என்றோ பட்டங்கள் எதுவும் வழங்கப்பெறவில்லை என்பது வரலாறு.

இந்த வரலாற்றை நினைவுகூறும் விதமாகதான் ஒவ்வொரு சதய விழாவிற்கும், திருமுறை வீதி உலா நடத்தப்பட்டு, அதில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், நாவுக்கரசர் உருவங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு திருமுறைகள் பாடப்படும்.

மேலும் இன்றைய தமிழ் வளர்ச்சித் துறைபோன்று சோழர் காலத்தில் தமிழுக்கென்றே தனித்துறை இருந்தது என நீலகண்ட சாஸ்திரிகள் ஆதாரப்பூர்வமாக தனது சோழர்கள் பற்றிய ஆய்வு நூலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சமஸ்கிருதத்திற்கோ, வேதங்களை நெய்யூற்றி வளர்ப்பதற்கோ எந்த துறையும் ஏற்படுத்தவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்

Leave a Reply