shadow

ராகுல் காந்தியை விரும்பிய பிரபல நடிகை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரபல நடிகை ஒருவர் விரும்பியதாக பத்திரிகையாளர் எழுதிய புத்தகம் ஒன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை கரீனாகபூரும், சோனியா காந்தி குடும்பமும் ஒருகட்டத்தில் நெருக்கமாக இருந்ததாகவும், அப்போது கரீனாகபூர், ராகுல்காந்தியை விரும்பியதாகவும், இரு குடும்பத்திற்கும் நெருக்கமான ஒரு பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு இது நடந்ததாகவும், அப்போது கரீனாகபூர் நடித்த படங்களை முதல் நாளே ராகுல்காந்தி பார்த்துவிடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்துள்ள கரீனாகபூர், இந்த தகவலை மறுத்துள்ளார். இரு குடும்பங்களும் நெருக்கமாக இருந்தனர் என்பது மட்டுமே உண்மை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். #KareenaKapoor #RahulGandhi #saifalikhan #congress

ராகுல்காந்தி, கரீனா கபூர், சயீப் அலிகான், பத்திரிகையாளர்,

Leave a Reply