ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்களை அழித்த 22 பேர் கைது!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்த 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தி பள்ளிகளை நடத்தும் அரசியல்வாதிகளே இந்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை அறியாத அப்பாவி தொண்டர்கள் இந்திக்கு எதிராக போராடுவதாக நினைத்து கொண்டு ரயில் நிலையங்களிலும் தபால் நிலையங்களிலும் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரயில் நிலையத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்த 22 பேர்களை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

ரயில் நிலையங்களில் இந்தி எழுத்தை அழிப்பதற்கு பதிலாக இந்தி எதிர்ப்பாளர்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அழிக்கலாமே என்று இந்தி ஆதரவாளர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply