shadow

ரபேல் விமான ஒப்பந்தம்: பிரான்ஸ் அதிபர் அதிரடி கருத்து

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து முன்னாள் பிரான்ஸ் அதிபர் கூறிய பதில் இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தற்போதைய பிரான்ஸ் அதிபர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் மெக்ரான் செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, ‘‘கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி பாரீஸ் வந்த போது ரூ.58 ஆயிரம் கோடி செலவில் 36 ரபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் போட்டது. இது இரு நாட்டு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம்.

இந்த விவகாரத்தில் நான் மிக தெளிவாக இருக்கிறேன். இது 2 நாட்டு அரசுகளுக்கு இடையே விவாதிக்கப்பட்டது. அப்போது நான் அதிபர் பதவியில் இல்லை. கடந்த ஆண்டு மே மாதம் தான் நான் அதிபரானேன். இதை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பே தெளிவாக கூறிவிட்டார்.

இதுகுறித்து வேறு எதுவும் என்னால் கூற முடியாது. ஏனெனில் நான் அப்போது பதவிலும் இல்லை. நாங்கள் மிக தெளிவான சட்ட திட்டங்களுடன் செயல்படுகிறோம் என்று கூறினார்.

Leave a Reply