shadow

ரத்த தானம் செய்தால் விடுமுறை: ஜார்கண்ட் அரசு நூதன அறிவிப்பு

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ரத்த தானம் செய்யும் ஊழியர்களுக்கு 4 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை ஜார்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

ஒரு முறை ரத்ததானம் செய்துவிட்டு நான்கு நாட்கள் விடுமுறையை அந்த ஊழியர் தனக்கு தேவையான போது நான்கு நாட்கள் விடுமுறையை எடுத்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் நோயாளிகளுக்கு ரத்தம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்தே இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்தா அறிவிப்பால் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

Leave a Reply