பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று பாட்ஷா என்பது அனைவரும் அறிந்ததே கடந்த 1995ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் வரலாற்று சாதனை செய்தது

இந்த நிலையில் இந்த படத்தின் ஒருசில காட்சிகளை மட்டும் மீண்டும் படமாக்கி இந்த படத்தை புதிய வடிவில் கொண்டு வர திரையிட படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாக ஒரு தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது

குறிப்பாக இடைவேளைக்கு முந்தைய மாஸ் காட்சியான சண்டைக்காட்சியை தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் மாஸ் சண்டைக்காட்சி ஆக மாற்றப்பட இருப்பதாகவும் அதே போல கிளைமாக்ஸ் காட்சியில் உள்ள சண்டை காட்சியும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் ஆட்டோகாரன் பாடலை தற்போதைய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் புதுப்பொலிவுடன் படமாக்கப்பட உள்ளதாகவும், இதற்காக ரஜினிகாந்திடம் சில நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்கப்பட்டது என்றும், கூறப்படுகிறது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு பாட்ஷா படம் மீண்டும் புதுப்பொலிவுடன் வெளிவந்தால் மீண்டும் வசூலில் சாதனை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி, பாட்ஷா, புதுப்பொலிவு, ரஜினிகாந்த்,

Leave a Reply