ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல்: வெளியானது ‘காலா’ செகண்ட்லுக்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று அதிகாலை சரியாக அதிகாலை 12 மணிக்கு அவர் நடித்துள்ள ‘காலா’ படத்தின் செகண்ட்லுக் வெளியாகியுள்ளது.
‘காலா’ படத்தின் செகண்ட்லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இந்திய அளவிலும், உலக அளவிலும் முதலிடத்தை பிடித்து சாதனை செய்துள்ளது.
இந்த படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் இரவுபகலாக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.