ரஜினி படத்திலும் தொடரும் சிறுத்தை சிவாவின் ‘வி’ செண்டிமெண்ட்!

தல அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விசுவாசம் ஆகிய நான்கு படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்க தயாராகி வருகிறார்

இந்த படத்தின் பூஜை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 அன்று நடைபெறும் என்றும் இதனை அடுத்து படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை அன்றே இந்த படத்தில் டைட்டில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது

தற்போது இந்த படத்திற்கும் ’வியூகம்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது

ஏற்கனவே ’வி’ சென்டிமென்ட் உடன் தனது படங்களுக்கு தொடர்ச்சியாக ’வி’ என்று ஆரம்பிக்கும் தலைப்புகளை வைத்து வந்த சிவா, தற்போது இந்த சென்டிமென்ட்டை ரஜினி படத்திலும் தொடர்கிறார்என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக மஞ்சுவாரியார் நடிக்க இருப்பதாகவும் மகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிகிறது

Leave a Reply