ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும்: தமிழக அமைச்சர்

அதிமுக, திமுக கூட்டணியை எதிர்க்க ரஜினி மற்றும் கமல் இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை இதுவரை இரு தரப்பினர்களும் அறிவிக்கவில்லை. தமிழக மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் இணைந்து பணியாற்றுவோம் என இரு தரப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கமல், ரஜினி கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, ‘அதிமுக கூட்டணி முன்பு ரஜினி, கமல் இணைப்பெல்லாம் தூள்தூளாகும் என்றும், ரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள் என்றும், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் அஜித் குறித்து அமைச்சர் ஜெயகுமார் கூறியபோது, ‘நடிகர் அஜித் கண்ணியமானவர் என்றும் தொழில் பக்தி மிக்கவர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply