ரஜினி, கமல் இணைப்புக்கு ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடும் பிரபல நடிகை!

திமுக மற்றும் அதிமுக கூட்டணியை ஒரே நேரத்தில் சமாளிக்க ரஜினி மற்றும் கமல் இணைய நீண்ட விவாதங்களுக்குப் பிறகு தற்போதுதான் முடிவு செய்துள்ளனர்

இந்த இணைப்பு நடப்பது சாத்தியமே இல்லை என்று கூறப்பட்ட நிலையில் இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது இது சாத்தியமாகியுள்ளது

இந்த நிலையில் இந்த இணைப்பை ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போடும் வகையில் கமல் கட்சியில் உள்ள பிரபல நடிகை ஸ்ரீபிரியா ஒரு கருத்தை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி கமல் இணைப்பு நடந்தால் அதில் கமல் தான் முதல்வர் வேட்பாளர் என்று அவர் தெரிவித்துள்ளார். இன்னும் நினைப்பே நடைபெறவில்லை, இணைப்பு நடந்த பின், தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று, அதன் பின்னர்தான் முதல்வர் யார் என்பது குறித்து யோசிக்க வேண்டும்

ஆனால் இணைப்பு நடப்பதற்கு முன்னதாகவே முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் ஸ்ரீபிரியாவை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply