ரஜினியை சமாளிக்க ஸ்டாலினால் முடியவில்லையா? வருகிறார் மோடியின் நண்பர்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வர் ஆவதற்கு இருக்கும் ஒரே தடை ரஜினிகாந்த் தான் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். திமுகவுக்கு அதிமுக ஒரு போட்டியாகவே இருக்காது என்றும் ரஜினிகாந்த் தான் பெரும் சவாலாக இருப்பார் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் ரஜினியின் இமேஜை உடைக்க கடந்த சில நாட்களாக பெரும் முயற்சிகள் செய்துவரும் நிலையில் தற்போது திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் பணி செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது

வரும் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் உடன் இணைந்து பணிபுரிய இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 50 ஆண்டுகாலம் பாரம்பரியம் உள்ள ஒரு கட்சி, ரஜினியை சமாளிக்க மோடியின் நண்பரான, மோடியின் வெற்றிக்கு உதவிய, பிரசாந்த் கிஷோர் தான் தேவைப் படுகிறாரா? என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

 

Leave a Reply