ரஜினியை அடுத்து ரஜினி பட வில்லன் கலந்துகொள்ளும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேர்கிரில்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த படம் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு இந்திய பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது மூன்றாவதாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கலந்துகொள்ளவுள்ளார். இவர் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

அக்ஷய்குமார் கலந்துகொள்ள இருக்கும் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற நிகழ்ச்சியின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் இதற்கான லொகேஷன்கள் பார்க்கும் பணியில் டிஸ்கவரி சேனல் குழுவினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply