ரஜினியின் ஸ்டைலில் பேரன் வேத்: செளந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலில் அவரது பேரனும் செளந்தர்யா ரஜினியின் மகனுமான வேத் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து பேண்ட் பைகளுக்குள் கையை வைத்தவாறு இருக்கும் போஸில் அவரது பேரன் வேத் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரஜினியின் இளையமகள் செளந்தர்யா, தனது டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தாத்தாவை போல் பேரன்’ என்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை டுவிட்டர் பயனாளிகள் ரசித்து வருகின்றனர்

 

Leave a Reply